Nokia C12 Pro போன் 6,999 ரூபாயில் வெளியாகியுள்ளது! பட்ஜெட் செக்மென்டை கலக்கும் நோக்கியா!

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் புதிதாக நோக்கியா நிறுவனம் அதன் C12 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் Octa Core Processor வசதி, 2GB Virtual RAM, Google Stock Android OS என பலவிதமான அட்டகாசமான அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த புதிய Nokia C12 Pro 2GB + 2GB Virtual RAM + 6GB ஸ்டோரேஜ் மாடல் 6,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் அடுத்த 5GB RAM (3GB + 2GB Virtual RAM) + 6GB ஸ்டோரேஜ் மாடல் 7,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் Light Mint, Charcoal, Dark Cyan என மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Nokia.com, Amazon ஆன்லைன் மற்றும் நேரடி கடைகளில் விற்பனை செய்யப்படும்.

போனில் 6.3 இன்ச் HD+ டிஸ்பிளே வசதி உள்ளது. இதில் ஒரு 8MP கேமரா மற்றும் முன்பக்கம் 5MP செல்பி கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இதன் கேமரா Night Mode மற்றும் Portrait Mode இரண்டும் கொண்டுள்ளது.

இதில் Android 12 (Go Edition) OS வசதி இருப்பதால் நமக்கு சுத்தமான Bloatware இல்லாத ஒரு ஆண்ட்ராய்டு அனுபவம் கிடைக்கும். இதற்கு இரண்டு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 12 மாத Guarantee வசதி உள்ளது. இதில் நாம் அதிகபட்சமாக 256GB கூடுதல் ஸ்டோரேஜ் SD Card மூலம் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.