சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. கன்னட படமான MUFTI என்ற படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல. அங்கு ஷிவ்ராஜ் குமார் நடித்த வேடத்தில் தான் தமிழில் சிம்பு நடித்துள்ளார். முதலில் இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிப்பதாக இருந்தது.
பின்பு சிம்பு நடித்த காட்சிகளை போட்டு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் அவரையே படத்தின் ஹீரோவாக மாற்றிவிட்டனர். இதற்காக கதையில் பல மாற்றங்களை செய்து பத்து தல படத்தை சிம்புவின் படமாக உருவாக்கினார்கள் படக்குழுவினர்.
Leo: லியோ படத்தில் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்..ஓகே சொல்வாரா விஜய் ? பதட்டத்தில் லோகேஷ்..!
முதலில் இப்படத்தில் கௌதம் கார்த்திக் தான் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். பின்பு தான் கதையில் பல மாற்றங்களை செய்து சிம்புவை நாயகனாக மாற்றினர். எனவே MUFTI படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புது திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.
இந்நிலையில் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்த பத்து தல படத்தின் இசை வெளியிட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொள்ள நடிகர் சிம்பு பல விஷயங்களை உணர்ச்சிகரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் லூசு பெண்னே பாடலை பாடி நடனமாடி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்தார் சிம்பு.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரிக்க படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் படி இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், பத்து தல படத்தில் முதலில் ரஜினி தான் நடிக்கவேண்டியது. ஆனால் அவர் இப்படம் ரீமேக் படம் என்பதால் வேண்டாம் என கூறிவிட்டார் என்றார்.
அதன் பிறகு தான் சிம்புவை இப்படத்தில் நடிக்க அணுகியதாகவும், இக்கதாபாத்திரத்திற்கு சிம்பு கனகச்சிதமாக பொருந்தினார் என்றும் கூறியுள்ளார் ஞானவேல் ராஜா. இந்நிலையில் இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் பலர், ரஜினி தன் திரைவாழ்க்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ரீமேக் படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் இப்படத்தை ரீமேக் படம் என சொல்லி நிராகரித்தது ஏன் என கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பத்து தல திரைப்படமும் வெற்றிபெற்று சிம்புவிற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.