Radharavi about Rajinikanth: ராதாரவியிடம் பேசி வரவழைத்து அவர் கையால் அறை வாங்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
முத்துகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில் உள்ளிட்டோர் நடித்த முத்து படம் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ஹிட்டானது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார் ரஜினி.
ஓபனிங் பாடல்முத்து படத்தில் வந்த ஓபனிங் சாங்கான ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை ரஜினிக்கு ராசியான எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். அந்த பாடல் இன்றும் கூட பிரபலம். இப்படி ரசிகர்களின் நினைவில் அப்படியே இருக்கும் எவர்கிரீன் படமான முத்து குறித்து ராதாரவி ஒரு சுவார்ஸ்ய தகவலை தெரிவித்தார்.
அம்பலத்தான்முத்து படத்தில் சரத்பாபுவின் தாய்மாமன் அம்பலத்தானாக நடித்திருந்தார் ராதாரவி. அவருக்கு முத்து ரஜினியை கண்டாலே பிடிக்காது. ராதாரவியை பார்த்தாலே சரத்பாபு வீட்டில் வேலை செய்யும் அனைவரும் பயப்படுவார்கள். அப்படி இருக்கும்போது சரத்பாபுவுக்கு ராதாரவி வெளிநாட்டு மதுபான பாட்டிலை கொடுக்க அதை முத்து தடுக்க பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிடும்.
அறைராதாரவியின் கையை பிடித்து பாட்டிலை கீழே போட வைத்துவிடுவார் முத்து. அந்த ஆத்திரத்தில் முத்துவை ஓங்கி அறைவார் ராதாரவி. அந்த காட்சிக்கு ராதாரவி தான் சரிபட்டு வருவார் என முடிவு செய்ததே ரஜினி தானாம். ரகுவரனை விட்டு தன்னை அறைய வைத்தால் சரியாக இருக்காது. ராதாரவி தான் சரியான ஆள் என்று ரஜினிகாந்த் கூறினாராம்.
ரஜினிரஜினி ஒரு நாள் ராதாரவியை அழைத்து, சார் முத்துனு ஒரு படம். வில்லன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்றாராம். அதை கேட்ட ராதாரவியோ, எனக்கு காமெடி கூட வரும் என்றாராம். அந்த அம்பலத்தான் கதாபாத்திரம் நல்ல கேரக்டர். ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும். அதை ரகுவரன் செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். நீங்கள் அறைந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றாராம். இதையடுத்தே முத்து படத்தில் நடித்தாராம் ராதாரவி.
சரிடேட்ஸ் கேட்ட தன்னை முத்து படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் ரஜினி என ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ரஜினி சொன்னது தான் சரி. ராதாரவி அவரை அறைந்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ராதாரவியாவது ஒரு அறை தான் அறைந்தார். ஆனால் பொன்னம்பலமோ ரஜினியை புரட்டி எடுத்திருப்பார். ரஜினி பாவம் போன்று அடிவாங்கியதை பார்த்து அழுதவர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.