சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் பிரம்மாண்டமாக உருவாகயிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களை நிதானமாக தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் கமல் தயாரிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்திற்காக எக்கசக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘மாநாடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்தாண்டு சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், அதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு முன்பாகவே கமிட்டான ‘பத்து தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘முப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. கெளதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தாதா கதாபாத்திரத்தில் தற்போது சிம்பு நடித்துள்ளார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் கதாபாத்திரம் குறைவாகவே இருந்தாலும் சிம்பு ‘பத்து தல’ மீது காட்டிய ஆர்வத்தால் அவரது கதாபாத்திரத்திற்கான காட்சிகளை படக்குழு அதிகரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக உருவாகும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிம்புவின் 48வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
Leo: ‘லியோ’ படப்பிடிப்பில் நிலநடுக்கம்.. தளபதி எப்படி இருக்கார்.?: பதறிய ரசிகர்கள்.!
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்பு 48 படத்தினை இயக்கவுள்ளார். உலகநாயகனின் பட நிறுவனமான ராஜ்கமல் எஸ்டிஆர் 48 படத்தை தயாரிக்கிறது. இந்தப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே, திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் சிம்பு ஜோடியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பத்து தல’ படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
44 வயதில் ‘படையப்பா’ பட நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்.!