தன்னுடன் சேர்ந்து நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. அந்த திருமணத்திற்கு சூர்யா வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சூர்யா மனம் மாறுவதாக இல்லை. தன் காதலில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்தே ஜோதிகாவை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அப்பா சிவகுமார், அம்மா, தம்பி கார்த்தியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார் சூர்யா. ஜோதிகாவின் நல்ல குணங்கள் மாமனார், மாமியாருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
என் மருமகள் மாதிரி வருமா என உறவினர்களிடம் பெருமையாக பேசி வந்திருக்கிறார் சூர்யாவின் அம்மா. இந்நிலையில் தான் ஜோதிகா தன் கணவர், குழந்தைகளுடன் மும்பையில் தனிக்குடித்தனம் செய்ய விரும்புகிறார் என தகவல் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் ரூ. 70 கோடிக்கு மும்பையில் அபார்ட்மென்ட் வாங்கி குடியேறியிருக்கிறார் சூர்யா. மகள் தியா, மகன் தேவ் ஆகியோரை மும்பையில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளாராம். சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக வீட்டில் இருந்து வருவது, ஹோட்டல்களுக்கு செல்வது என்று இருக்கிறார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
ஜோதிகா தற்போது டப்பா கார்டல் என்கிற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் வெப்தொடர் ஆகும். அவர் அந்த டப்பா கார்டல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வசதியாகத் தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
முதல் முறையாக பெற்றோரை பிரிந்து தனியாக வசிக்கத் துவங்கியிருக்கிறார் சூர்யா. இந்த தனிக்குடித்தனம் தற்போதைக்கு தானா இல்லை நிரந்தரமா என்பது தெரியவில்லை.
கெரியரை பொறுத்தவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஃபிட்னஸ் ஃப்ரீக்கான திஷா பதானி ஹாட்டாக இருப்பதாக உணர்கிறார் சூர்யா. அதனால் மதிய உணவு சாப்பிட, டீ குடிக்க திஷா பதானியை தன் கேரவனுக்கு அழைக்கிறார் சூர்யா என பாலிவுட் விமர்சகரமான உமைர் சந்து ட்வீட் செய்தார்.
Suriya: சூர்யாவாவது, கவர்ச்சி நடிகையை தனியாக அழைப்பதாவது: இதை அவர் ஹேட்டர்ஸே நம்ப மாட்டாங்களே
அதை பார்த்தவர்களோ, சூர்யாவாவது வேறு ஒரு பெண்ணை திரும்பிப் பார்ப்பதாவது. இதை அவரின் ஹேட்டர்ஸே நம்ப மாட்டார்களே. போயி வேறு வேலை இருந்தா பாருங்க சந்து. அப்படியே வெளிநாட்டிலேயே இருந்துவிடுங்கள். இந்தியா பக்கம் வந்தீர்கள் என்றால் செமத்தியா இருக்கு என சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய், அஜித் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சூர்யா 42 படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் அல்லது டீஸரை தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். சூர்யா 42 படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
Suriya42: ரூ. 500 கோடிப்பு: விஜய்யின் லியோ சாதனையை தவிடுபொடியாக்கிய சூர்யா 42?
சூர்யா 42 படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 500 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் இசை, டிஜிட்டல், சாட்டிலைட் உள்ளிட்ட உரிமங்கள் தான் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.