அடுத்து தமிழில் படம் இயக்கும் அல்போன்ஸ் புத்ரன்
மலையாள சினிமாவில் முக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நேரம், பிரமேம் போன்ற வெற்றி படங்களை தந்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கோல்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது. நெட்டிசன்கள் அல்போன்ஸை விமர்சித்தனர். அதற்கு அவரும் கடுமையான சில பதில்கள் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் இன்று அல்போன்ஸ் புத்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்து நான் ஒரு தமிழ் படம் இயக்குகிறேன். இந்த படத்தை என் பழைய நண்பர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என அறிவித்துள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாக உள்ளது.