காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அத்துடன் இந்த விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த பகுதியில் செயல்பட்டு வரும் இன்று மார்ச் 23ம் தேதி வியாழக்கிழமை 2 ஊராட்சி நடுநிலை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.