இசைஞானி இளையராஜாவை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒரு மட்டமான மனிதர் என்று விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், பசங்க, ஈசன் போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், இசையமைப்பாளர் இளையராஜா தான் என்னுடைய குரு. அவருடைய பாடல்களைக் கேட்டு தான் இசையை கற்றுக்கொண்டேன். ஆனால், இளையராஜா என்கிற தனிமனிதன் மேல் விமர்சனம் உள்ளது. இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது.
இசைஞானி என்ற பட்டத்திற்கு அவர் முழு தகுதியானவர். இளையராஜா என்கிற இசையமைப்பாளரைப் பற்றியும் அவர்களது பாடல்களைப் பற்றியும் என்னால் மணிக்கணக்கில் பெருமையாக பேச முடியும். ஆனால் ஒரு மனிதனாக அவர் ரொம்ப மட்டமானவர்.
சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்கு தெரியாதுனு சொல்லியுள்ளார் இளையராஜா. இது அவருக்கு தேவையா.
ஏசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா. அத்தனை பேரை கேலப்படுத்துகிற, ஒரு கேவலமான ஈன புத்தி இருப்பதால் இளையராஜா மட்டமான மனிதர் என்று ஜேம்ஸ் வசந்தன் சாடியுள்ளார்.
newstm.in