காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிகப்படியான நுகர்வு, காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காற்று மாசுபாடு காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆண்டுக்கு 3.5 பில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் எனவும் ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.