2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
காயத்தில் இருந்து மீண்ட பேரிஸ்டோ
இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜானி பேரிஸ்டோ சமீபத்தில் காயம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.
ஆனால் ஓய்வுக்கு பிறகு ஜானி பேரிஸ்டோ காயத்தில் இருந்து மீண்டாலும் எதிர் வரும் முக்கிய தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்பதால், ஐபிஎல் தொடரில் ஜானி பேரிஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
BCCI
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஜானி பேரிஸ்டோ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்த நிலையில், பஞ்சாப் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சாம் குர்ரன் மற்றும் லிவிங்ஸ்டோனுக்கு அனுமதி
ஜானி பேரிஸ்டோ-வுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்து இருந்தாலும், மற்ற பஞ்சாப் அணி வீரர்களான சாம் குர்ரன் மற்றும் லிவிங்ஸ்டோனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் பஞ்சாப் அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
AP