வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் 2023 போட்டியின் தொடக்க விழாவில் பிரபல நடிகைகள் கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 போட்டி –
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
நடனமாடப்போகும் முன்னணி நடிகைகள்
கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் துவக்க விழா நடத்தப்படவில்லை. கொரோனா காரணமாகவும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாகவும் துவக்க விழா நடைபெற வில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் மீண்டும் துவக்க விழாவுடன் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் அரை மணி நேரம் மட்டும் இந்த துவக்க விழா நடைபெற இருக்கிறதாம்.
விழாவில், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மார்ச் 31-ந் தேதி இரவு 7.30 மணிக்கு இந்த துவக்க விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.