கடலூர் : கடலூர் சாவடி பகுதியில் உள்ள அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதில் 2 பேர் பிடிபட்டனர். புதுப்பாளையத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்தும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு, இங்கு சேர்க்கப்பட்டவர்கள்.