கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடு! நன்றி கூறிய ஜெலென்ஸ்கி


தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு ஆதரவு தொகுப்புக்கு ஒப்புதல் அளித்த பின்லாந்து நாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி கூறியுள்ளார்.

போராடும் உக்ரைன்

ரஷ்யா தொடங்கிய போர் ஓர் ஆண்டை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் பெருமளவில் பாதித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதியுடன் எதிர்த்து போராடி வருகிறார்.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன.

ஜெலென்ஸ்கி/Zelensky @Handout / UKRAINIAN PRESIDENTIAL PRESS SERVICE / AFP

பின்லாந்து ஆதரவு

அந்த வகையில் பின்லாந்து நாடு 161 மில்லியன் யூரோ மதிப்பிலான 14வது பாதுகாப்பு ஆதரவு தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, பின்லாந்து அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி நினிஸ்டா உக்ரைனுக்கு 14வது பாதுகாப்பு ஆதரவு தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது கண்ணிவெடி அகற்றலுக்கான கனரக ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் டாங்கிகள், தங்கள் பொதுவான வெற்றிக்கு ஒரு சிறந்த பங்களிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பின்லாந்து உடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதை தாங்கள் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    

நினிஸ்டா/Niinisto  @Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.