நெல்லை: காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ரூ.1 தரப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நெகிழி இல்லா மாநகரை உருவாக்கவும் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக தச்சநல்லூர் மண்டலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.