கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வன விலங்குகள் உள்ளன.

ஒரு வனத்துறையை சேர்ந்த வழிகாட்டியுடன் அவற்றை கணக்கெடுக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வன பகுதியில் 14 வழித்தடங்களில் இன்று மதியம் வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன. புள்ளிமான், வெளிமான்கள் அதிகம் இருப்பதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.