கோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பெண்மீது ஆசிட் அடித்துவிட்டு ஓடினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் புடித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இதுபோல நீதிமன்றம் அருகே இருவர்மீது கொலை வெறி தாக்குதல்நடத்தப்பட்டதும், ஒருவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல் […]