தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் இன்று தொடங்கியுள்ளது, தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கவனம் ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட காதலர் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு இந்த சம்பவம் குறித்து நாளை முதலமைச்சர் பதில் தெரிவிப்பார் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.