சென்னை: காவல்துறை பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை பதிலளித்துள்ளது. சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு, 2021 நவம்பரில் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் வழக்கு தொடரப்பட்டது.