சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்துக்கு மாற்றாக பரங்கிமலை, நங்கநல்லூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.