தங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒரு செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் தாக்குதல் நடத்தினர் என்றும் அந்த செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர் குருவம்மாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் ஆசிரியர் பாரத் மீது கடந்த 21ந்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குருவம்மாள், தங்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.