ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, ஹப்ளீஸ், பார்க் ஹையத் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.
நாளை தொடங்க உள்ள ஜி-20 நிதித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிண்டி ஐடிசி சோழ ஒட்டி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிண்டி ஐடிசி சோழ நட்சத்திர விடுதி வரை இரு புறங்களிலும் ஜி20 தொடர்பான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் தங்கி இருக்கும் நட்சத்திர விருதுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தங்கிருப்பவர்களின் விவரங்களும் பெறப்பட்டு வருகிறது. சென்னையில் ஏற்கனவே கடந்த மாதம் ஜி 20 கல்வி கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் தற்போது நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM