டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம்

ஆரி அர்ஜூனன் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் படம் 'எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்'. ஆரி மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்ரீ நடிக்கின்றனர். இதில் மொட்ட ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரௌதர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் யு.கவிராஜ் இயக்கி உள்ளார்.

இந்த படம் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ஹாலிவுட் பாணியிலான சயின்ஸ் பிக்சன் படம். இந்த பூமியில் இருக்கும் கனிம வளத்தை கொள்ளை அடிக்க வேற்று கிரகவாசிகள் படையெடுக்கிறார்கள். அதனை இங்குள்ள ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆரி கூறுகையில், 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் யு.கவிராஜுக்கு நன்றி. எனது கேரியரில் முதல்முறையாக முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் சேனலில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த ஒரு வகையான காட்சியை பார்க்க முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து வயதினரும் பார்வையாளர்கள் இந்த சுவாரஸ்யமான அறிவியல் புனைகதையை ரசிக்க முடியும், இது வேற்றுகிரகவாசிகள் மற்றும் பிற அற்புதமான புதுமைகளைக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான பொழுதுபோக்கு திரைப்படமாகும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.