15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை தன்பாலின ஈர்ப்புக்காக கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் இருந்து பணிக்கு வராமல் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவான அவரை கைது செய்தனர். அவரிடம் நடைப்பெற்ற விசாரணையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை பெற்று அந்த பணத்தில் தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டு, கால் பாய்ஸிடம் பணத்தை செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சத்திய சாய் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM