டெல்லி: தருமபுரி மாவட்டத்தில் ரூ.170 கோடியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலம் – திருப்பத்தூர் வாணியம்பாடி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டத்தில் 18 கி.மீ. சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது 15 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை 4 வழி சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.