திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தாழைக்கரை பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் படி, இன்று திருமணம் நடைபெற இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மிக விரைவாக செய்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் வந்து இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென மணப்பெண் காணாமல் போய் உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் படி, போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன மணப்பெண் தாராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனால், அந்த பெண் திருமணம் பிடிக்காமல் காதலருடன் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு மணப்பெண்ணை தேடி வருகின்றனர். இதற்கிடையே, திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.