நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும் அளவிற்கு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களின் தொழிற்சங்கங்கள், அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை எச்சரித்துள்ளன.
இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் கடிதம்
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அளவுக்கு பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எச்சரித்து, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம் எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு மேலதிகமாக மேலும் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க அனுமதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராகவே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான போராட்டங்கள் நியாயமற்றது என்பதோடு, முழுமையாக அரசியல் நோக்கத்திலானது என குறிப்பிட்டுள்ளார்.