நம்மிள் சிலருக்கு தனது பற்களை சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதில் மிக ஆர்வம் உண்டு. ஆனால் அதை சரியான முறையில் கடைபிடிப்பதில்லை.
பற்கள் தான் நாங்கள் உரையாடும் போது ஒருவரை கவரச்செய்கின்றது. அதனாலேயே பற்களை வெண்மைப்படுத்த முற்படுவார்கள். பல செயற்கை முறையிலான சிகிச்சைகளை செய்வார்கள்.
அதனால் வேறு பாதிப்புக்கள் தான் ஏற்படும். ஆகவே இயற்கையான முறையில் எவ்வாறு பற்களை வெண்மைபடுத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
மஞ்சள் – 1/2 தே.கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 1 தே.கரண்டி
- எலுமிச்சை – சில துளிகள்
- கோல்கேட் தூள் – 1 தே.கரண்டி
செய்முறை
இவை அனைத்தையும் ஒரு சிறிய தட்டில் இட்டு நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் வாரத்திற்கு ஒரு முறை பற்துலக்குவது போல் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் தன்மை நீங்கி வெண்மை உண்டாகி பளிச்சென்று தோற்றமளிக்கும் என்பது குறிப்படித்தக்கது.