நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘காஜ்வா-இ-ஹிந்த்’ குழு தொடர்பாக 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்தியாவை வன்முறை வழிகள் மூலம் இஸ்லாமிய நாடாக மாற்ற, இந்திய இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இட்டு செல்ல பாகிஸ்தானியரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழு ‘காஜ்வா-இ-ஹிந்த்’ என்று கூறப்படுகிறது. இந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு(என்ஐஏ) தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று மத்திய நாக்பூர், வதோடா பகுதிகளில் உள்ள சதரஞ்சிபுரா, கவலிபுரா உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சதரஞ்சிபுராவில் வசிக்கும் 3 பேரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.