புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.5,500ஆக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்பட்டு ரூ.6,500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால நிதியுதவி ரூ.2,500ல் இருந்து ரூ.3,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்ற அமைச்சரவை கோப்பிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.