புதுச்சேரி,
புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள கோப்புக்கு துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏற்கெனவே மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்த நிலையில் ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கவும் பேரிடர் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.2,500 லிருந்து 500 ரூபாய் உயர்த்தி ரூ.3,000 ஆக வழங்குவதற்கான அரசாணை வெளியிட கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.