பேயிடமிருந்தேனும் வேலையை வாங்கி இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காணும் கனவு
எதிர்க்கட்சித் தலைவர் தினமும் கனவு காண்கின்றார். எங்கே சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் இணக்கப்பாடு என தொடர்ச்சியாக கூச்சலிடுகின்றார். சபையில் சமர்ப்பிக்குமாறு கூறுகின்றார். எதிர்க்கட்சித் தலைவரே சற்றுப் பொறுமையாக இருங்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.