மதுரை: 20 கி.மீ. தொலைவில் ஒரு மதுபான கடை தான் என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? என வாகைகுளம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.