சென்னை: பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து மருந்து கட்டுப்பாடு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்துவருகின்றனர். இனி புகார்களை வாட்ஸ் அப் (Whatsapp) செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் அப் (Whatsapp) செயலி மூலமாக அளிக்கலாம். புகார்களைப் பற்றிய விவரங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.