கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பைக் ரேஸ் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸ் நடைபெறவுள்ளது. 13 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு போட்டிகளும் உண்டு. மொத்தம் 120 வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போட்டிகள் பயிற்சி வகுப்புகளாக அமையும். தேசிய அளவிலான இந்த போட்டிகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.