முதலிரவை தள்ளிப்போட்ட மணப்பெண் பின்னர் நகைகளுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இளைஞர் ஒருவருக்கு புரோக்கர் பார்த்த பெண்ணுடன் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் முதலிரவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் மணமகள் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் முதலிரவு இப்போது வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அந்த இளைஞரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு நாட்களில் அந்தப்பெண் மாயமானார்.
வீட்டில் இருந்த நகைகளையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பெண்ணை அறிமுகம் செய்த புரோக்கரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் வீட்டில் இருந்து ஓடிப்போன பெண் நகைகளோடு புரோக்கரின் வீட்டில் இருந்துள்ளார். புரோக்கரும் அந்த பெண்ணும் நகைக்காக திட்டமிட்டு இந்த செயலை செய்தது தெரியவந்தது.
இருவரையும் கையும் களவுமாக பிடித்த இளைஞரின் குடும்பத்தினர் அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து மோசடி வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
newstm.in