வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் மோடி உள்ளார். புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள அந்த நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் நாட்டிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கான கேபிள் கார் போக்குவரத்து வாரணாசியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.644.49 கோடியில் அமைய உள்ள இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி 24-ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த வழித்தடம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள கன்டோன்மென்ட் ரயில் நிலையம் (வாரணாசி ஜங்ஷன்) முதல் கொடவ்லியா கிராசிங் வரை அமையும் என நகர மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அபிஷேக் கோயல் தெரிவித்துள்ளார்.