நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம், தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
தரவரிசையில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கு முன்பு, ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் இருந்து வந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து, முதலிடத்திலிருந்து இந்தியா 2-வது இடத்துக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரு அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றுள்ளது. இருந்தாலும், தசம புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
We have a new World No.1 🎉
Australia climb to the top of the @MRFWorldwide ICC Men’s ODI Team Rankings after the series victory against India 👏
🗒: https://t.co/CXyR2x0PJJ pic.twitter.com/Ujz1xrWpw0
— ICC (@ICC) March 22, 2023