தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ஜெயம் ரவி. கடந்த வருடம் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்திருந்தார் இவர். இதன் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் பலரும் படமாக்க ஆசைப்பட்ட கல்கியின் பிரபலமான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமானது. மணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம். இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனிடையில் பூலோகம் பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ என்ற படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடற்கொள்ளையை மையமாக வைத்து உருவான ‘அகிலன்’ படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியானது.
இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிசிலும் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமாக 18 மொழிகளில் இந்தப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் 100 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Hiphop Tamizha: இந்தியாவிலே முதன்முறை: ஹிப் ஹாப் ஆதி செய்துள்ள அசத்தல் காரியம்.!
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தாயரிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜெயம் ரவியின் 32 வது படமாக இந்தப்படம் உருவாகவுள்ளது. இவர் தற்போது சைரன், இறைவன் படங்களில் நடித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kovai Guna: கோவை குணா மறைவுக்கு காரணம் இதுதான்: மதன் பாப் கூறிய அதிர வைக்கும் தகவல்.!