லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மளமளவென முன்னேறிவிட்டார் என சிலர் பேசி வருகின்றனர். இயக்குனராக 2017 ஆம் ஆண்டு அறிமுகமான லோகேஷ் ஐந்தே வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துவிட்டார் என நாம் அனைவரும் பேசி வருகின்றோம்.
ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கஷ்டங்களையும், அவரின் கடினமான உழைப்பை பற்றியும் பெருமளவு நாம் பேசுவதில்லை. லோகேஷ் கனகராஜின் முதல் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானாலும் அந்த படம் வெளியாவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் உழைத்துள்ளார் லோகேஷ்.
Leo: லியோ பட ரகசியத்தை கசியவிட்ட பிரபலம்..செம அப்சட்டில் லோகேஷ்..!
அதன் பின்னரே அப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்தே அவரின் இரண்டாவது திரைப்படம் வெளியானது. இவ்வாறு ஒவ்வொரு படங்கள் வெளியாவதற்கு லோகேஷ் கடுமையாக உழைத்து வருகின்றார்.
அதே போல தான் தற்போது லியோ படத்திற்கும் கடுமையான உழைப்பை கொட்டி தீர்த்துள்ளார் லோகேஷ். காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக லியோ படத்தின் படப்பிடிப்பு கடுமையான குளிரில் நடந்து முடிக்கப்பட்டுள்ளது. என்னதான் மிக கடுமையான குளிர் இருந்தாலும் ஒரு நாள் கூட வீணாக்காமல் லோகேஷ் மளமளவென படத்தை எடுத்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சென்னையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இன்று காஷ்மீரில் லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. அதனை படக்குழு கொண்டாடியது மட்டுமல்லாமல் காஷ்மீரில் நடத்த மறக்கமுடியாத தருணங்களையும், படக்குழு உழைத்த விதத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு படம் எடுக்க இவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இதுவே படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.லோகேஷின் முந்தைய படங்களை விட இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அந்த எதிர்பார்ப்பை இதுபோல வீடியோ, புகைப்படங்கள் மூலம் மேலும் அதிகரித்து வருகின்றது படக்குழு. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் இதுவும் படத்திற்கு ஒரு விதமான ப்ரோமோஷன் தான். ஆனாலும் இந்த டெக்னீக் நன்றாக தான் இருக்கின்றது.
படத்திற்கு பின்னால் நடப்பதை பார்க்க ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கின்றது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.