விஜய்யின் லியோ திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர் என்பது நமக்கு தெரியும். படத்தில் நடிக்கும் அனைவரையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. த்ரிஷா, கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் லியோ படத்தில் நடித்து வருகின்றனர்.
இதில் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனின் பகுதி நிறைவுபெற்றுள்ளது. இதனை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் கதிர் நடித்துவருவது தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
Leo: விஜய்க்கு எதிராக இப்படி ஒரு சதி நடக்கிறதா ?குற்றம்சாட்டும் ரசிகர்கள்..!
இவரை லியோ படத்தில் முக்கியமான ரோலில் லோகேஷ் நடிக்கவைத்து வருவதாகவும், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் லோகேஷ் கணித்திருந்தார். ஆனால் இந்த ரகசியத்தை பிரபல யூடூப் ஸ்டார் இர்பான் அம்பலப்படுத்திவிட்டார்.
சில நாட்களுக்கு முன் யூடியூபில் பிரபலமான இர்பான் காஷ்மீருக்கு சென்றார். இவர் காஷ்மீர் செல்லயிருப்பதாக போஸ்ட் ஒன்றை போட்ட உடனே ரசிகர்கள் அனைவரும் இவரும் லியோ படத்தில் நடிக்க போகின்றார் என கூறிவந்தனர்.
ஏனென்றால் லோகேஷ் பொதுவாக தன் படங்களில் யூடூப் ஸ்டார்களை நடிக்கவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனவே லியோ படத்தில் யூடூப் பிரபலமான இர்பான் நடிக்கின்றார் என தகவல்கள் பரவின. இதையடுத்து காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட படக்குழு உச்சகட்ட பீதியில் ஹோட்டலுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது இர்பான் வழக்கம் போல வீடியோ எடுத்தார். அந்த சமயத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவை தவிர மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அங்கே இருந்தனர். கூடவே நடிகர் கதிரும் படக்குழுவுடன் இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் கதிர் இப்படத்தில் நடிக்கிறாரா ? இதுவரை படக்குழு கதிர் நடிப்பதாக அறிவிக்கவில்லையே ? ஒருவேளை ஏதேனும் சர்ப்ரைஸான ரோலாலில் கதிர் நடிப்பதால் தான் லோகேஷ் இதனை அறிவிக்கவில்லையா ? என பல கேள்விகளை கேட்டு வந்தனர்.
இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த கதிர் இப்படத்திலும் மிக முக்கியமான அதுவும் சர்ப்ரைஸான ரோலில் நடிப்பதாக ரசிகர்களே பேசி வருகின்றனர். அப்படி நடிக்கவில்லை என்றால் ஏன் அவரும் படக்குழுவுடன் காஷ்மீரில் இருக்கின்றார் எனவும் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இதையடுத்து இவ்வளவு நாள் ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை இர்பான் ஒரே வீடியோவில் போட்டு உடைத்துவிட்டார் என லோகேஷ் அப்சட்டாக இருப்பதாகவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். எது எப்படியோ இர்பான் காஷ்மீர் சென்றதினால் ரசிகர்களுக்கு லியோ படத்தை பற்றிய எதிர்பாராத அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.