கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பசங்க. பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி உள்ளிட்டோர் சிறுவர் நட்சத்திரமாக நடித்திருந்தனர். இதில் நடித்திருந்த கிஷோரின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் கோலி சோடா பார்ட் 1 மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தனர். அதனை தொடர்ந்து பசங்க கிஷோர் சகா, வஜ்ரம், ஆறு அத்தியாயம், ஹவுஸ் ஓனர் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளர் உள்ளிட்ட பல முகங்களை கொண்ட ப்ரீத்தி குமாரை காதலித்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவர் கிஷோரை விட நான்கு விட வயது மூத்தவர். சின்னத்திரையில் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள் மற்றும் வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் ப்ரீத்தி குமார். தொலைக்காட்சிகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.
Hiphop Tamizha: இந்தியாவிலே முதன்முறை: ஹிப் ஹாப் ஆதி செய்துள்ள அசத்தல் காரியம்.!
அண்மையில் தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடினார் ப்ரீத்தி குமார். அவருக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த கிஷோர், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சோம்மா. அடுத்த வருடம் நான் நம் பிறந்த நாள் மட்டும் அனைத்து விசேஷங்களையும் கணவன் மனைவியாக கொண்டாடுவோம் அச்சோம்மா. லவ் யூ என பதிவிட்டிருந்தார்.
Manimegalai: மதமாற்றம் செய்யப்பட்டேனா.?: ஒரே பதிலால் அதிர வைத்த விஜே மணிமேகலை.!
இந்நிலையில் தற்போது கிஷோர், ப்ரீத்தி குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து கிஷோர், ப்ரீத்தி குமார் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
View this post on Instagram A post shared by Preethi Kumar (@preethikumar_official)