சென்சார் குழு இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் படத்திற்கு U / A சான்றீதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து படத்தை பார்த்த சென்சார் குழு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறினார்களாம். மேலும் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தரமாக அமையும் என்றும் கூறியதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் படத்திற்கு மேலும் மேலும் பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் தங்கள் நாயகனுக்கு ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
எதிர்பார்ப்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பத்து தல படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து சமீபத்தில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிம்பு மிகவும் குதூகலத்துடன் காணப்பட்டது அவரது ரசிகர்களுக்கு புது உத்வேகத்தை தந்துள்ளது. மேலும் பத்து தல படத்தின் மீது சிம்பு
மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறாராம். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து பத்து தல திரைப்படம் தனக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று தரும் என நம்பியுள்ளார் சிம்பு.. அதற்கேற்றார் போல படமும் செமையாக வந்துள்ளதாம். மேலும் படத்தை முதல் ஆளாக பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் படத்தை பற்றி பாசிட்டிவாக பேசியது கூடுதல் பலமாக அமைந்தது
மாற்றம் கன்னட படமான MUFTI என்ற படத்தின் ரீமேக் தான் பத்து தல. கன்னடத்தில் ஷிவ்ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் தான் சிம்பு நடித்துள்ளார். இப்படத்தின் ஆரம்பத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாகவும், சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுமாக தான் இருந்தது. பிறகு சிம்பு நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இம்ப்ரஸ்ஸாகி கதையில் பல மாற்றங்களை செய்து சிம்புவை நாயகனாக மாற்றிவிட்டனர்.அதன் பிறகு இப்படம் வேற லெவலில் ரீச்சாகி இருக்கின்றது. எனவே MUFTI படத்தின் கதைக்களத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில் பத்து தல படத்தை உருவாக்கியுள்ளார் கிருஷ்ணா
பல ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பத்து தல திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இடையில் சில சிக்கல்கள்,கொரோனா ஊரடங்கு என பல விஷயங்களால் பத்து தல திரைப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஒருவழியாக இப்படம் முடிக்கப்பட்டு மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.சிம்புவுடன் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்