அஜித் குமாரின் தந்தை பி. சுப்பிரமணியம் சென்னையில் இன்று காலை காலமானார்.
வயோதிகம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.
அஜித்தின் தந்தை மறைவை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்
வெளிய்ட்டிள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர்
வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர்
நேரில் சென்று அஜித் தந்தை சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
“எங்கள் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம். எங்கள் இழப்பையும் புரிந்து கொண்டு இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்க வேண்டிக்கொள்கிறோம்” என்று அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.