அட்மின் பிரதீப்புக்கு சிறையில் இந்த நிலைமையா..? சவுக்கு சங்கர் வெளியிட்ட பரபர தகவல்..!

தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை. இதை நம்பி ஏராளமான பெண்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி இருக்கலாம்.

சுமார் 22 மாதங்களுக்கு மேலாக இதுகுறித்து அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளது திமுக அரசு.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை விமர்சித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் ”வாய்ஸ் ஆப் சவுக்கு” என்ற பக்கத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடியை வைத்து மீல்ஸ் பகிரப்பட்டது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து வாய்ஸ் ஆப் சவுக்கு பக்கத்தின் அட்மின் மீது சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் வாய்ஸ் ஆப் சவுக்கு பக்கத்தின் அட்மின் பிரதீப் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

திமுக அரசின் இத்தகைய செயல் கொடுங்கோன்மை தனமானது என்று பல்வேறு தரப்பினர் சாடி வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகையில் அந்தர் பல்டி அடித்த திமுக அரசை இனி யாரும் விமர்சிக்க கூடாது என்பதற்காக இந்த கைது நடவடிக்கையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘வாய்ஸ் ஆப் சவுக்கு’ அட்மின் பிரதீப்பை குறித்து சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ” தம்பி பிரவீன் நலமாக உள்ளார். சிறையில் அவனுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பெற்றோர் கொடுத்த உடைகளில் கருப்பு நிற ஆடைகள் இருந்ததால் அவை வழங்கப்படவில்லை. சிறையில் கருப்பு ஆடைகள் உடுத்தக் கூடாதாம்.வீடியோவை போடச் சொன்னது சவுக்கு சங்கர் என வாக்குமூலம் தரச் சொல்லி காவல் துறை அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டுள்ளான். மிகுந்த மன உறுதியோடு இருக்கிறான். ஜாமீன் மனு விசாரணை திங்கள் அன்று” என்று இவ்வாறு சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதீப்பின் கைது நடவடிக்கை குறித்து சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், வாய்ஸ் ஆப் சவுக்கு பகிர்ந்த வீடியோ யாரோ ஒருவரால் எடிட் செய்யப்பட்டுள்ளது. அதை பகிர்ந்ததற்காக கைது செய்வது கோழை தனம். மேலும், அந்த வீடியோவில் பெண்களை அவமதித்துள்ளதாக கூறுகின்றனர். அப்படி என்றால் இதனை ஆண்டுகாலம் அந்த காமெடி குறித்து எந்த பெமினிஸ்ட்டும் பேசவில்லையே… நானும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளேன் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் காவல்துறை” என்று சவுக்கு சங்கர் ஆவேசமாக பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.