டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.