நாமக்கல்: ராசிபுரம் அருகே பண்ணை ஒன்றில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பன்றி உயிரிழந்துள்ளது. மற்ற பன்றிகளுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் பண்ணையில் வளர்க்கப்பட்ட 20 பன்றிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணையை சுற்றி 1 கி.மீ வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.