கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல வருடகாலமாக மிளிர்ந்து வரும் மற்றும் இலங்கை திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியல் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி திரைப்படத்திற்காக குறித்த விருது தனக்கு கிடைத்ததாகவும், அந்த விருதினை இந்த வருடம் இலங்கையில் வைத்து அதன் ஒழுங்கமைப்பாளர்கள் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.
அது மறக்க முடியாத ஒரு விருது மற்றும் நிழ்வாக நான் பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச ரீதியில் தமிழ் நடிகையாக என்னுடைய நாட்டின் பெயரை பதியவைப்பது என்பது மிகப் பெரிய விடயம். இலங்கையின் தமிழ் பெண்ணாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவுடனான முழுமையான நேர்காணலை கான கீழ்வரும் காணொளியை பார்வையிடுக,