சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை (25) ஆரம்பமாகவுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், நாளை (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
ஒரு நாள் போட்டி அட்டவணை வருமாறு :
முதல் ஒருநாள் போட்டி – மார்ச் 25 ஆம் திகதி ஒக்லாந்து
இரண்டாவது ஒருநாள் போட்டி – மார்ச் 28 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்
மூன்றாவது ஒருநாள் போட்டி – மார்ச் 31 ஆம் திகதி ஹாமில்டன்