இன்றைக்கு கூகுள் முகப்பு பக்க டூடுல் ஆனது கிட்டி ஓ’நீலின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. குழந்தை பருவத்திலிருந்தே காது கேளாதவராக இருந்தாலும், “உலகின் வேகமான பெண்” என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெக்சாஸில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி என்ற பகுதியில் மார்ச் 24, 1946 ஆம் ஆண்டில் பிறந்தார், கிட்டி ஓநெய்ல் 5 மாத கைக்குழயநையாக இருந்தபோது, ஒரே நேரத்தில் சளி, தட்டம்மை மற்றும் பெரியம்மை நோயால் தாக்கப்பட்டார். அதிக காய்ச்சலை ஏற்படுத்திய காரணத்தால் காது கேளாமைக்கு வழிவகுத்தது. அவரது தாயார், செரோகி இல்லத்தரசி, கிட்டி ஓ’நீலுக்கு சைகை மொழியைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் பேச்சு மற்றும் உதட்டைப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்.
கிட்டி ஓ’நீல்
ஸ்டண்ட் பெண்மனியாக கிட்டி தொழிலை தொடங்குவதற்கு முன் டிராக் படகுகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டினார். அவர் கட்டிடங்களில் இருந்து குதிப்பதையும், உயரமான ஜன்னல்களுக்கு வெளியே தொங்குவது, தீ வைத்து எரிப்பது போன்ற ஸ்டன்டுகளில் பங்கு பெற்றுள்ளார்.
தி ப்ளூஸ் பிரதர்ஸ், வொண்டர் வுமன் (1977-1979) மற்றும் ஸ்மோக்கி மற்றும் பாண்டிட் போன்ற திரைப்படங்களிலும், தி பயோனிக் வுமன் மற்றும் பரேட்டா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவரது ஸ்டண்ட் காட்சிகளை காணலாம்
டிசம்பர் 6, 1976 ஆம் ஆன்டில் ஆல்வோர்ட் பாலைவனத்தில், Motivator எனப்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் இயங்கும் மூன்று சக்கர ராக்கெட் காரை ஓட்டி அதிகபட்சமாக மணிக்கு 825.127 km/h வேகத்தில் ஓட்டி சாதனை படைத்தார். முந்தைய சாதனையான 516 km/h என்ற சாதனையை முறியடித்தார்.
அவரது சக ஊழியர்கள் பலர் நிகழ்ச்சியின் போது விபத்தில் சிக்கி இறந்ததை தொடர்ந்து ஓ’நீல் 1982 ஆம் ஆண்டில் ஸ்டண்ட் செய்வதில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த நேரத்தில், அவர் பல்வேறு வேகமான 22 சாதனைகளை வைத்திருந்தார்.
சைலண்ட் விக்டரி: தி கிட்டி ஓ’நீல் ஸ்டோரி என்ற தலைப்பில் ஓ’நீலின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுயசரிதை, 1979 இல் வெளியிடப்பட்டது.
2018-ல் கிட்டி ஓ’நீல் தனது 72 வயதில் நிமோனியாவால் இறந்தார்.