எனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சி…! முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி குற்றச்சாட்டு

புதுடெல்லி

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது புகார், பாலியல் துஷ்பிரயோகம் என நீண்டு கொண்டே போகும்.

பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இம்ரான் நசீர் பாகிஸ்தான் அணிக்காக 79 ஒரு நாள் மற்றும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து எனா ஷாகித் அப்ரிடிதான் காப்பாற்றினார் என கூறி உள்ளார்.

நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.

இது ஒரு மெல்ல கொல்லும் விஷம்; அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனது மூட்டுகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன, இந்த காரணத்திற்காக, நான் கிட்டத்தட்ட 6-7 ஆண்டுகள் அவதிப்பட்டேன். ஆனால் அப்போதும், ‘தயவுசெய்து என்னை படுத்த படுக்கையாக்காதே’ என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.

அதிர்ஷ்டவசமாக, அது ஒருபோதும் நடக்கவில்லை.

நான் பலரை சந்தேகித்தேன், ஆனால் நான் எப்போது, என்ன சாப்பிட்டேன், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் விஷம் உடனடியாக செயல்படாது. அது பல ஆண்டுகளாக உங்களை நமெல்லக்கொல்லும் இதை யார் செய்தாலும் நான் இன்னும் சாகவில்லை கொல்ல விரும்புபவரை விட காப்பாற்றுபவர் சிறந்தவர்.

நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவ சிகிச்சைக்காக செலவானது. எனது சிகிச்சைக்கு கொஞ்சம் கூட காசு இல்லை. அப்போது எனது நிலையை அறிந்த ஷாகித் அப்ரிடி எனக்காக 40 லட்சம் வரை செலவு செய்தார். எனது டாக்டருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பி விடுவார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை, என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அவர் டாக்டரிடம் கூறியிருக்கிறார்.

அண்ணன் அப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என கூறி உள்ளார்.

இம்ரான் நசீரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது .2007 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இம்ரான் நசீர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.